உள்நாடு

சிவனடி பாத மலைக்கு புதிய மின் மாற்றிகள் – தொடரும் பணிகள்.

(UTV | கொழும்பு) –

ஹெலிகாப்டர் மூலம் சிவனடி பாத மலைக்கு மின் மாற்றிகள் கொண்டு செல்லும் பணி கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து இடம் பெற்று வருகிறது. சிவனடி பாத மலைக்கு சுத்தமான குடிநீர் வழங்கவும் தடை இன்றி மின் வழங்க இலங்கை மின்சார சபை முன் வந்து சிவனடி பாத மலைக்கு செல்லும் பிரதான வீதியில் மூன்று இடங்களில் புதிய மின் மாற்றிகள் பொருத்தும் பணி ஆறம்பிக்க பட்டு துரிதமாக பணிகள் இடம் பெற்று வருகிறது.

இதற்கு ரத்மலான விமான படையின் உழங்கு வானுர்தி மூலம் மின் மாற்றிகள் மற்றும் மின் உபகரணங்கள் கடந்த இரண்டு நாட்களாக நல்லதண்ணி நகரில் உள்ள வாகன தயாரிப்பு இடத்தில் இருந்து இப் பொருட்கள் கொண்டு செல்ல படுகிறது.
மின் மாற்றிகள் பொருத்திய பின்னர் சியத்த கங்குல ஓயா பகுதியில் இருந்து சுத்தமான குடிநீர் மலை உச்சிக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு இருந்து மலை அடிவாரம் வரை உள்ள பகுதிகளில் குடி நீர் வழங்க முடியும் எனவும், மலைக்கு செல்லும் வழியில் யாத்திரியர்களுக்கு குடி நீர் பெற்று கொள்ள சகல வசதிகளும் செய்து கொடுக்க உள்ளது என தேசிய நீர் வடிகால் திணைக்களம் முன் வந்து உள்ளது.

     

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொழும்பில் உள்ள சீன பிரஜைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவு

மழையுடனான காலநிலை தொடரும்

பேரூந்து விபத்து தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பம்