உள்நாடு

ரம்பாவால் திறந்து வைக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகம்!

(UTV | கொழும்பு) –

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் பல்கலைக்கழகமான நொதேர்ன் யுனி (Nothern uni) கட்டடத்துக்கான கிரக பிரவேச பூஜை நேற்று   இடம்பெற்றது.

நொதேர்ன் யுனியின் நிறுவுனரான இந்திரகுமார் பத்மநாதன் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாக கொண்ட கனடா முதலீட்டாளராவார். இவரின் முயற்சியாக யாழ்ப்பாணம் – கந்தர்மடம் பகுதியில் நொதேர்ன் யுனி தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலில் விசேட வழிபாடுகளை தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்ட நொதேர்ன் யுனியில் சம்பிரதாயபூர்வமாக கிரக பிரவேச பூஜை இடம்பெற்று சாமி படம் வைக்கப்பட்டது.

இதில், நொதேர்ன் யுனியின் நிறுவுனர் இந்திரகுமார், அவரது மனைவியான தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் நொதேர்ன் யுனி பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

 

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஆணைவிழுந்தான் – சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 588 பேர் கைது

IMF ஒப்பந்தத்தை மாற்றினால் நாட்டிற்கான பணத்தை இழக்க நேரிடும்.

editor