உள்நாடுசூடான செய்திகள் 1

அம்பாறையை அச்சப்படுத்திய சம்பவம் ; ஒருவரின் நிலை கவலைக்கிடம்

(UTV | கொழும்பு) –    கத்தி மற்றும் வாள்களுடன் வேனில் வந்த சிலர் பேருந்து நிலையத்திற்கு அருகில் காத்திருந்த நபரின் கைகளை வெட்டிய சம்பவம் ஒன்று அண்மையில் பதிவாகியுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் அங்கிருந்த மற்றுமொருவரை தாக்கிவிட்டு சுற்றியிருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அம்பாறை பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இதுவரை 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபரும் தாக்கப்பட்ட நபரும் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைகள் வெட்டப்பட்ட நபரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில், அம்பாறை தலைமையக பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது , 05 சந்தேக நபர்களையும் அவர்கள் பயணித்த வேனையும் கைது செய்துள்ளனர்.

தற்போது, ​​சந்தேகநபர் ஒருவர் தப்பியோடியுள்ளதுடன் அவரை தேடியும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அம்பாறை நகரில் இரு கும்பல்களுக்கிடையிலான தகராறு காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாம் எண்ணெய் இறக்குமதிக்கு விசேட அனுமதிப்பத்திர முறை

குடிவரவு மற்றும் குடியகல்வு தொழிற்சங்கங்களது தீர்மானம்

உலக சுகாதார அமைப்பு இலங்கைக்குப் பாராட்டு