உள்நாடுசூடான செய்திகள் 1

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் !

(UTV | கொழும்பு) –

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (13) பாராளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 81 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. இதன்படி, வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் 13ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டு வரைவை நிதியமைச்சராக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததோடு, இரண்டாம் வாசிப்பு விவாதம் நவம்பர் 21ஆம் திகதி வரை நடைபெற்ற பின்னர், அன்று பிற்பகல் இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அன்றைய தினம் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் பதிவாகின. வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 22ஆம் திகதி முதல் இன்று வரை நடைபெற்றது.

VIDEO:

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

ஒன்லைன் மூலம் பரீட்சைகள் திணைக்களத்தின் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு

மற்றுமொரு எரிபொருள் தாங்கி இன்று நாட்டிற்கு