உள்நாடு

வானிலையில் மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.

(UTV | கொழும்பு) –

நாளை முதல் அடுத்த சில நாட்களில் நாட்டில் பல பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலையில் தற்காலிக அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

வவுனியா, கிளிநொச்சி, மன்னார், அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கிழக்கு, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும். மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

மருதானை,தெமட்டகொட ரயில் சேவை தாமதம்

இலங்கைக்காக கடன் சலுகை திட்டத்தை ஆரம்பிக்க Paris Club ஆயத்தம்