(UTV | கொழும்பு) –
விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நவம்பர் 5ஆம் திகதி வௌியிடப்பட்ட 2356/43 இலக்க வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரங்கள், பணிகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றுவதற்காக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட இடைக்கால குழு கலைக்கப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්