(UTV | கொழும்பு) –
ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுத்து இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வினைக் காண்பதில் பௌத்த தேரர்கள், அனைத்து அரசியல் தரப்பினர், பொதுமக்களை மையப்படுத்திய உலகத் தமிழர் பேரவையினரின் முயற்சியானது தாமதமாக முக்கெடுக்கப்படடுவதாக இருந்தாலும் அது வெற்றிபெறுவதிலேயே தமிழர்களினதும் ஒட்டுமொத்த நாட்டினதும் எதிர்காலம் தங்கிள்ளது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
உலகத் தமிழர் பேரவை மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை தமிரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්