உள்நாடு

கொழும்பில் தமிழர்களை அச்சுறுத்தும் பொலிஸ் – சபையில் மனோ

(UTV | கொழும்பு) –

 

கொழும்பில் வசிக்கும் தமிழர்களின் விபரங்களை கோரி வழங்கப்படும் விண்ணப்பங்கள் தமிழில் வழங்கப்படுவதில்லையென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று காலை பாராளுமன்றத்தில் சாடியதுடன் ரணில் பொலிஸ் இராஜிஜியமா நடக்கிறதெனவும் கேள்வியெழுப்பினார்.அவர் மேலும் கூறியதாவது ,

பொலிஸார் வழங்கும் விண்ணப்பப் படிவத்தில் பெயர் விபரங்களுடன் சமயம் என்னவென்றும் கேட்கப்படுகிறது.அப்படியென்றால் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்கவா இதனை கேட்கிறீர்கள்? தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் இந்த செயற்பாடு நடக்கிறது.ரணிலின் பொலிஸ் இராச்சியமா?அமைச்சர் டிரானின் பொலிஸ் இராச்சியமா ?அல்லது தேசபந்துவின் பொலிஸ் இராச்சியமா இப்போது நடக்கிறதென நான் கேள்வியெழுப்ப விரும்புகிறேன்.

முன்னர் யுத்தம் இருப்பதால் இப்படிச் செய்தீர்கள் என்று கூறப்பட்டது.இப்போது யுத்தம் உள்ளதா?தனிப்பட்ட விபரங்களை கேட்பது எதற்காக ?எனவே தமிழர்களை இலக்குவைத்து இப்படிச் செய்யவேண்டாம்.எனது மக்கள் என்னிடம் கேள்வியெழுப்புகின்றனர்.வெள்ளை வேன் காலத்தில் கூட உயிர் அச்சுறுத்தலை பொருட்படுத்தாது செயற்பட்ட நாங்கள் இதற்கு பயப்படமாட்டோம் கூறினார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விமானப்படையின் தளபதிக்கு கொரோனா

நிறைவுகாண் மருத்துவவர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

கொரோனாவால் எரித்தவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு கோரிக்கை