உள்நாடு

யாழில் பயிர்களிடையே அதிகரித்த பூச்சித்தாக்கம்!

(UTV | கொழும்பு) –

யாழ்ப்பாணத்தில் பயிர்களிடையே பூச்சித் தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி, தனங்கிளப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருபதாயிரம் ஏக்கருக்கு அதிகமான நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில், பூச்சு அச்சுறுத்தல் குறித்து முதல்கட்ட ஆய்வுகளை சாவகச்சேரி விவசாய அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி, பயிர்களை சேதப்படுத்திய பூச்சிகளில் வெள்ளை வெட்டுக்கிளி அடையாளம் காணப்பட்டுள்ளது.
இருப்பினும், புதிதாக பயிர்களை சேதப்படுத்தும் கம்பளிப்பூச்சி குறித்து இதுவரை அடையாளம் காணப்படவில்லை என விவசாய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், இந்தவிடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நிபுணர்கள் குழுவொன்று வருகைத்தரவுள்ளதுடன், பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகளை இனங்கண்டு மருந்துகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பத்து கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

பேருவளை துறைமுகத்தினை தற்காலிகமாக மூட தீர்மானம்

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரை சந்தித்த சாணக்கியன்!