(UTV | கொழும்பு) – நியாயமற்ற முறையில் தம்மை கைது செய்து தடுத்து வைத்தமைக்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட அரச அதிகாரிகள் பலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டுகான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயங்கரவாத விசாரணைப் பிரிவின் (TID) பணிப்பாளருடன் இணைந்து தமது அரசியல் இலாபங்களுக்காக தம்மைக் கைதுசெய்து 5 வருடங்கள் சிறையில் வைத்திருக்க உத்தேசித்திருந்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகள் தனக்கு எதிராக பொய்யான அறிக்கைகளை வழங்குமாறு பணிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் அவர்கள் அவ்வாறு செய்ய மறுத்ததன் காரணமாக எனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டேன்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் எதிராக அடுத்த வாரம் வழக்குத் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளேன். அத்துடன், வழக்குப்பதிவு செய்து குறித்த நபர்களிடம் இழப்பீடு கோர உள்ளேன்.” என்றும் அவர் கூறியுள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්