உள்நாடு

டயனா, சுஜித், ரோஹன பாராளுமன்றம் வர தற்காலிக தடை!

(UTV | கொழும்பு) –

பாராளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே, சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோரின் பாராளுமன்ற சேவையை ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்துவதற்கு பாராளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழு தீர்மானித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோருக்கு இடையில் கடந்த ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலேயே சிறப்புரிமைகள் குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷ இது தொடர்பான தீர்மானத்தை இன்று பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பெலியத்தை சம்பவம் – மேலும் இருவர் கைது

ஜனாதிபதி அநுர தலைமையில் கல்வி அமைச்சின் செலவுத் தலைப்பு தொடர்பான கலந்துரையாடல்

editor

மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்