(UTV | கொழும்பு) –
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் இன்று கைது செய்யப்பட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று இரண்டாவது நாளாக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்த நிலையில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். பௌத்தம் உள்ளிட்ட மதங்களை இழிவுபடுத்தியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්