(UTV | கொழும்பு) –
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், இந்தியாவின் பொருளாதார சுபீட்சத்தின் சிற்பியான மொன்டெக் சிங்குக்கும் இடையில்,சுபீட்சத்தின் புகழ்பெற்ற தலைமைத்துவம் மற்றும் பொருளாதாரத் திறன் ஆகிய அம்சங்களின் மூலோபாய கலவையை எடுத்துக்காட்டும் வண்ணம் இச் சந்திப்பு நடைபெற்றது.
இந்த தனிப்பட்ட சந்திப்பு ஒரு உரையாடல் மட்டுமல்ல, தொலைநோக்கு பார்வையில் பொருளாதார வெற்றிக்கான பாதையை வகுத்த ஒரு சந்தர்ப்பமாகும். அறிவுசார் பாதைகள் உள்ளடக்கியதான கட்சி தொடர்பான ஏனைய விவேகமான புத்திஜீவிகளைக் கொண்ட குழுக்களுக்கும் இந்த விடயம் சென்றடைவது பற்றியும் கலந்துரையாடப்பட்டதுடன்,இந்திய தலைமை நிர்வாக அதிகாரி மன்றத்தின் மதிப்பிற்குரிய உறுப்பினர்களின் பங்கேற்பு இந்த பலமான சந்திப்பை மேலும் ஊக்கப்படுத்தியது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්