(UTV | கொழும்பு) –
எதிர்வரும் பொதுத் தேர்தல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் குழுவிற்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய அதிகாரிகள் சபையுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு இந்த புதிய நிர்வாக சபையும் தீர்க்கமான காரணியாக உள்ளதால், எதிர்வரும் ஆண்டில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான பாரிய பொறுப்பும் இந்த அதிகாரி சபைக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி இன்றைய கலந்துரையாடல் முக்கியமான கலந்துரையாடலாக அமையும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகிய இரண்டும் அடுத்த வருடம் நடத்தப்படும் என ஜனாதிபதி கூறியுள்ள போதிலும், தேர்தல் நடைபெறும் காலம் தொடர்பில் உறுதியான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්