உள்நாடுபுகைப்படங்கள்

கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில், முஸ்லிம் மீடியா போரம் நடாத்திய ஊடகச் செயலமர்வு!

(UTV | கொழும்பு) –  ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்திவரும் 75வது ஊடகச் செயலமர்வும் 21ஆம் நுாற்றாண்டில் இலத்திரனியவியல் மற்றும் சமூக ஊடகங்கள்  எனும் தலைப்பில்  25.11.2023 கொழும்பு 12 பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லுாரியில் காலை 08.00 – 05.00 பி.ப வரை நடைபெற்றது  இந் நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம் அமீன், மற்றும் கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லுாரியின் அதிபர் எம்.எச். மும்தாஜ் பேகம் ஆகியேர்கள் தலைமையில் நடைபெற்றது.

இவ் ஊடக செயலமர்வு கல்லுாரியின் அபிவிருத்தி சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. கல்லுாாியின் மாணவத் தலைவிகள், மற்றும் சிரேஸ்ட மாணவிகள் 160 பேர் கலந்து கொண்டார்கள்

இச் செயலமர்வில்   பிரபல ஊடக நிறுவனங்களின் முகாமையாளர்கள் சிரேஷ்ட ஊடகவியலாளர்களை விரிவுரைகளையும் செயற்பட்டு பயிற்சிகளையும் நிகழ்த்தினார்கள்.

சிரேஷ்ட ஊடகவியலாளர்  ஜீவா சதாசிவம்,  செய்தி அறிக்கையிடல்  மற்றும் ஏ.ஆர்.ஏ லோசன் சிரேஷ்ட ஒலிபரப்பாளர்,  வானொலியில் எவ்வாறு செய்தி அறிக்கையிடுதல் மற்றும் செய்தி வாசிப்பு , சத்தி தொலைக்காட்சியின் செய்தி முகாமையாளர் ஜிப்ரி ஜெபதர்சனின்  தொலைக்காட்சி செய்தியறிக்கையிடுதல் மற்றும் குரல் பயிற்சிகள் ,  சிகார் அனீஸ், சிரேஷ்ட வெளிநாட்டு செய்திச் சேவை,ஊடக பயிற்சியாளர் ,

இஸ்பாஹான் சராப்டீன்,இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் , சமுக சேவை ஊடக வலைத்தளங்களில்  கைத்தொலைபேசி ஊடாக  செய்தி தயாரித்தல்  போன்ற தலைப்புகளில் விரிவுரைகளை நிகழ்த்தினார்கள்

பிற்பகல் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக ஆதில் சத்தார் .பாக்கிஸ்தான் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடகம் , கலாச்சாரம் மற்றும் கல்வி செயலாளர் மற்றும் கல்லுாாியின் பிரதி ,உப அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பிணர்களும் முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பிணர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

அஷ்ரப் ஏ சமத்

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தில் அமைதியற்ற நிலை – கலகத்தடுப்பு பொலிஸார் வரவழைப்பு

இன்று மாலை விசேட அமைச்சரவை கூட்டம்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 666 ஆக அதிகரிப்பு