(UTV | கொழும்பு) –
வீட்டின் அருகே சைக்கிளில் சென்ற 13 வயது சிறுவன் லாரி மோதி உயிரிழந்தான். உஸ்ஸாபிடிய, உதுவான்கந்த வீதியில் தஸ்வத்த பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை 5.20 மணி அளவில் மின்சார சபையின் உப ஒப்பந்த நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான லொறியில் மோதுண்டு படுகாயமடைந்த குழந்தை மாவனல்லை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.
உஸ்ஸாபிடிய ரிவிசந்த மத்திய பாடசாலையில் 8ஆம் ஆண்டில் கல்வி கற்கும் தினுவர என்ற சிறுவனே விபத்தில் உயிரிழந்துள்ளான்.
சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්