(UTV | கொழும்பு) –
இன்னும் ஒரு சில தினங்களில் இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவிக்கையில், 2023ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கான ஆவணங்களை தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
கடந்த உயர்தரப் பரீட்சையின் மீள்திருத்த பெறுபேறுகளும், இந்த வாரம் வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த நேற்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்திருந்தார். இதேவேளை கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්