(UTV | கொழும்பு) –
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை இலங்கையின் முன்னைய அரசாங்கம் சிதைத்தது என முன்னாள் சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் ரவிசெனிவிரட்ண ஏபிசிக்கு இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஏபிசி தெரிவித்துள்ளதாவது,
இலங்கையின் முன்னாள் அரசாங்கம் அரசியல் நோக்கங்களிற்காக பயங்கரவாத குழுவொன்றுடன் இணைந்து செயற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள இலங்கையின் முன்னாள் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி இதன் காரணமாக அவுஸ்திரேலியர்கள் உட்பட பெருமளவாளவர்களின் மரணம் 2019 இல் இடம்பெற்றிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். கிறிஸ்தவ தேவாலயங்களிலும் ஹோட்டல்களிலும் இடம்பெற்ற தாக்குதல்கள் இரண்டு அவுஸ்திரேலியர்கள் உட்பட 269 பேரை கொலை செய்தன – 500க்கும் அதிகமானவர்கள் காயமமடைந்தனர். இந்த குற்றச்சாட்டுகள் குறித்த சுயாதீன விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஆதரவளிக்கவேண்டும் என இலங்கையின் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை வேண்டுகோளை கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் தாக்குதலில் தப்பிய இலங்கை அவுஸ்திரேலிய பெண்மணியான சதுடில்லா வீரசிங்கவும் விடுத்துள்ளார்.அன்றைய நாள் பல குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளதால் ஒரேநேரத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு அவை இடம்பெற்றுள்ளதால் -பாரிய திட்டமிடல் இடம்பெற்றிருக்கவேண்டும் என அவர் தெரிவித்தார். முக்கிய புலனாய்வு அதிகாரியொருவர் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற பயங்கரவா அமைப்பினை சந்தித்தார் என அரசாங்கத்தின் முன்னாள் உதவியாளர் ஆசாத் மௌலானா தெரிவித்ததை சனல்4 செப்டம்பரில் ஒளிபரப்பியது. தாக்குதல்கள் மூலம் தேசிய பாதுகாப்பு பிரச்சினையை ஏற்படுத்தி அதன் மூலம் அதிகாரத்திற்கு வரும் கோட்டாபய ராஜபக்சவின் திட்டமாக இது இடம்பெற்றது என அவர் தெரிவித்திருந்தார்.
தற்போது இந்த குண்டுவெடிப்பு விசாரணைகளிற்கு தலைமைதாங்கிய ரவி செனிவிரட்ண முதல்முறையாக இது குறித்து மனம் திறந்துள்ளார்.
அரசியல் தலையீடுகள் விசாரணைகளை குழப்பின தடம்புரளச்செய்தன என அவர் தெரிவித்துள்ளார். குண்டுவீச்சு இடம்பெற்று ஆறுமாதங்களின் பின்னர் தனது குழுவை கோட்டாபய ராஜபக்ச விசாரணையிலிருந்து அகற்றினார் என அவர் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம்பதவியேற்றதும் காரணங்களை குறிப்பிடாமல் எனது குழுவை விசாரணைகளில் இருந்து அகற்றினார்கள் என தெரிவித்துள்ள அவர் அவ்வேளை அமைச்சரவையோ பிரதமரோ கூட நியமிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். அடுத்த சில மாதங்களில் மேலும் 22 விசாரணை உத்தியோகத்தர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகளில் இருந்து நீக்கப்பட்டார்கள் எனவும் தெரிவித்துள்ள அவர் எனினும் இந்த இடமாற்றங்களிற்கான காரணங்கள் எவற்றையும் அவர்கள் எனக்கு தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
செனிவிரட்ணவின் கீழ் பணிபுரிந்த 700 உத்தியோகத்தர்கள் வெளிநாடுகளிற்கு பயணம் மேற்கொள்வதற்கும் புதிதாக பதவியேற்ற கோட்டாபய அரசாங்கம் தடைவிதித்திருந்தது. ராஜபக்ச அரசாங்கத்தின் சகாக்களை விசாரணை செய்யமுயலும் பொலிஸாரை அச்சுறுத்தும் நடவடிக்கையாக இது இடம்பெற்றது என செனிவிரட்ண தெரிவித்துள்ளார். இது சட்டவிரோதமானது என அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என 90 பேருக்கு எதிராக இலங்கை பொலிஸார் குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.
இலங்கை புலனாய்வு பிரிவை சேர்ந்த சில அதிகாரிகளுக்கு முஸ்லீம் குழுவுடன் தொடர்பு உள்ளiதை நாங்கள் கண்டுபிடித்ததும் முட்டுக்கட்டைகளை எதிர்கொண்டோம் என செனிவிரட்ண தெரிவித்துள்ளார். இலங்கையின் புலனாய்வு பிரிவினருக்கும் முஸ்லீம் குழுவிற்கும் தொடர்புகள் காணப்பட்டமை அமெரிக்காவின் எவ்பிஐயின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டது என தெரிவித்துள்ள அவர் எவ்பிஐ பயங்கரவாதிகளுடனான தொடர்ச்சியாக உரையாடல்களை கண்டுபிடித்தது,இந்த ஐபி முகவரி இரகசிய புலனாய்வு பிரிவின் நபர் ஒருவருடையது எனவும் அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற அன்று காலை இராணுவபுலனாய்வார்கள் தற்கொலை குண்டுதாரியொருவரின் வீட்டிற்கு சென்றிருந்தனர் என தெரிவித்துள்ள அவர் எனினும் இந்த விடயத்தை அவர்கள் பொலிஸாரிடம் தெரிவிக்கவில்லைஎனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் சில நபர்களையும் குழுக்களையும் விசாரணை செய்யமுயன்றவேளை தடைகளை எதிர்கொண்டோம் எனஅவர் தெரிவித்துள்ளார். தற்கொலை குண்டுதாரியின் சகாக்களை பொலிஸார் விசாரணை செய்யமுயன்றவேளை புலனாய்வு பிரிவினர் இரண்டு தடவை தடுத்துநிறுத்தினர் அவர்கள் தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என குறிப்பிட்டனர் என தெரிவித்துள்ள அவர் அந்த அதிகாரிகள் புலனாய்வு தொடர்பான இரகசிய விடயங்களை கையாள்கின்றனர் என தெரிவித்ததால் நாங்கள் பின்னர் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්