உள்நாடு

நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவேண்டுமா? பத்திரிகையாளரிடம் கேள்வி கேட்ட ஜனாதிபதி.

(UTV | கொழும்பு) –

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளீர்களா என கேள்விஎழுப்பிய பத்திரிகையாளரிடம் நான் என்னசெய்யவேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்கள் என ஜனாதிபதி பதில் கேள்வி எழுப்பி சுவராஸ்யமாக உரையாடியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கேள்வி

ஜனாதிபதியானதும் நீங்கள் தனித்துவிட்டதாக தெரிவித்தீர்கள் – நாங்கள் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளோம் உங்களின் எதிர்கால திட்டங்கள் என்ன நீங்கள் மீண்டும் ஜனாதிபதியாவதற்காக தேர்தலில் போட்டியிட விரும்புகின்றீர்களா ஐக்கிய தேசிய கட்சியை வலுப்படுத்தி அதன் சார்பில் போட்டியிடப்போகின்றீர்களா அல்லது கூட்டணியை ஏற்படுத்ப்போகின்றீர்களா?

ரணில்- ஐக்கியதேசிய கட்சி அடுத்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறவிரும்புகின்றது ஏன் என்றால் அவர்கள் மாத்திரமே உண்மையை பேசினார்கள் – தெரிவித்தார்கள் அதன் காரணமாகவே அவர்கள் அரசியலில் இருந்து அகற்றப்பட்டார்கள் -அதுவே அவர்களின் பலமான விடயமாக காணப்படப்போகின்றது.

பல புதிய முகங்கள் உள்ளன அரசாங்கத்தில் எதிர்கட்சியில் உள்ள பலர் உள்ளனர் அவர்களும் போட்டியிடுவார்கள். நாங்கள் வங்குரோத்துநிலையை இல்லாமல் செய்வதே – அழிப்பதே எனது முதல் பணி . வங்குரோத்து நிலையை இல்லாமல் செய்ததும் நாங்கள் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளோம் அந்த தருணத்தில் என்ன செய்வது என்பதை நாங்கள் தீர்மானிக்கவேண்டும்.
வங்குரோத்து நிலையை ஒழிப்பதற்காக உங்கள் அனைவரினதும் ஆதரவை பெறுவதற்காக நான் இங்கு வந்துள்ளேன்.

கேள்வி- உங்கள் திட்டங்கள் நோக்கங்கள் வெற்றிபெற்றால் நீங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவீர்களா?
ருணில்- நான் என்ன செய்யவேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்கள் நான் உங்களை கேட்கின்றேன்

பதில்- நான் அதற்கு பதிலளித்தால் பல எதிர்வினைகள் வெளியாகலாம். ரணில்- விடை என்ன?

பதில்- ஏன் போட்டியிடக்கூடாது?

ரணில்- அப்படியானால் ஏன் மக்களிடமிருந்து எதிர்வினைகள் வெளியாகலாம் என தெரிவிக்கின்றீர்கள்? பதில்- நான் அவ்வாறு தெரிவிக்கவில்லை ஆனால் நான் உங்களின் தனிப்பட்ட திட்டங்கள் என்னவென்பதை அறியவிரும்புகின்றேன்

பதில்- நான் அது முடிவடையும்வரை காத்திருப்பேன் என தெரிவித்தேன். பொருளாதார நிலைமைய சாதகமான விதத்தில் மாற்றியமைப்பதே எனது நோக்கம் நாங்கள் அந்த இலக்கை நெருங்கிவிட்டோம், நான் அரசியல் இல்லாமல் புதிய பொருளாதாரத்தை அறிமுகப்படுத்த விரும்புகின்றேன் – நாங்கள் அது குறித்து கலந்துரையாடுவோம்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தேசியப்பட்டியலுக்காக முஸ்லிம்களின் தேசப்பற்றை மலினப்படுத்த சிலர் சதி – திஹாரியில் ரிஷாட் எம்.பி

editor

வெகுசன ஊடக அமைச்சின் புதிய செயலாளராக அனுஷ பெல்பிட்ட

ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் நியமனம்