உள்நாடு

மின் கட்டணம் தொடர்பில் மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

(UTV | கொழும்பு) –

அடுத்த மின் கட்டண திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க உள்ளதாக என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
குறித்த தகவலை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளரான பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.
மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் குறித்த முடிவு எடுக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது தேசிய மின்சார உற்பத்தியில் 52 வீதம் நீரால் உற்பத்தி செய்யப்படுவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.மேலும், மின் உற்பத்தி நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது.
இந்நிலை தொடரும் பட்சத்தில் இந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்க முடியும் என மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சீனாவின் சேதன பசளை இறக்குமதிக்கு தடை

 மருந்துகளை திருடி விற்றவர் கைது

அரசியல் பழிவாங்கல்கள் இனிமேல் நடக்காது – ஜனாதிபதி அநுர

editor