உள்நாடு

136 மில்லியன் மோசடி – கைதான சந்தேக நபர்.

(UTV | கொழும்பு) –

காணி ஒன்றிற்காக போலி பத்திரம் தயாரித்து 136 மில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்த நபரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டா வீதியில் அமைந்துள்ள 87.5 பேர்ச்சஸ் காணிக்காக போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் நேற்று ராஜகிரிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளா. சந்தேக நபர் ராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் அளுத்கடை நீதவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் 517 நோயாளிகள் : ஒருவர் பலி

A/L பரீட்சை இன்று ஆரம்பம்- 346,976 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்

பயணியுடன் வாக்குவாதம் – காதை கடித்த பஸ் நடத்துனர்