உள்நாடு

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரை சந்தித்த சாணக்கியன்!

(UTV | கொழும்பு) –

பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸுக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றிருந்தது. அவ் சந்திப்பின் போது சமகால அரசியல் தொடர்பாகவும் குறிப்பாக மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் காணப்படும் பிரச்சனைகள் தொடர்பான முழு விபரங்களும் அதற்கான தீர்வுகளும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழரசுக் கட்சியின் எதிர்கால மாநாடு தொடர்பாகவும் இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பு தொடர்பில் சாணக்கியன் தெரிவிக்கையில்,
அவுஸ்திரேலியாவும் எமது நாட்டைப் போல் (Federal) கூட்டாச்சி அரசியல் அமைப்பைக் கொண்ட நாடாகும் மாநிலங்கள் போல் இங்கு மாகாணமாக காணப்படுகின்றது.
அங்கு மற்றைய நாடுகளை போல் அல்லாது இலங்கையை சேர்ந்த புலம்பெயர்ந்த சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் என பலர் வாழ்ந்து வருகின்றார்கள்.

அவ் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் அவுஸ்திரேலியாவை நடுநிலைமை வகிக்கும் நாடு என்ற வகையில் ஏற்றுக்கொள்ளும் என்ற ரீதியில் அவுஸ்திரேலிய அரசானது எமக்கான அரசியல் தீர்வு விடையத்தில் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மதுபானத்தின் விலையில் மாற்றம்

மேலும் 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

ஐ. தே.க தொகுதி அமைப்பாளர்கள் – சஜித் இடையே சந்திப்பு