(UTV | கொழும்பு) –
யாழ்ப்பாண மாவட்ட செயலக நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஒன்று கூடிய கடற்றொழிலாளர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய இழுவைமடிப் படகுகளை கட்டுப்படுத்த கோரி யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්