உலகம்

விசா சட்டத்தை மாற்றிய ஓமான்!

(UTV | கொழும்பு) –

சுற்றுலா விசா மூலம் ஓமான் நாட்டுக்குள் நுழைந்து பின்னர் அதனை பணி விசாவாக மாற்றுவதை 31.10.2023 முதல் நிறுத்துவதற்கு அந்நாட்டு காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, எந்த நாட்டிலிருந்தும் ஒருவர், சுற்றுலா விசா மூலம் ஓமன் நாட்டிற்குள் நுழைந்த பிறகு, எந்தவொரு காரணத்திற்காகவும் அதனை பணி விசாவாக மாற்ற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அந்தந்த தூதரகங்களில் இருந்து “ஆட்சேபனை இல்லை” என்ற கடிதத்தை சமர்ப்பித்த பின்னர், சுற்றுலா விசாக்கள் மூலம் ஓமான் நாட்டிற்குள் நுழைந்து அவற்றை பணி விசாவாக மாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. எனினும் புதிய தீர்மானம் காரணமாக அந்த வாய்ப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா விசாவில் ஓமானுக்குள் நுழைந்த ஒருவருக்கு ஓமானில் வேலை வாய்ப்பு கிடைத்தால், அவர் அந்த நாட்டை விட்டு வெளியேறி, பணி விசாவைப் பெற்று மீண்டும் ஓமன் நாட்டுக்குள் நுழைய வேண்டும்.

பல இலங்கையர்கள் முறையான நடைமுறைகளைப் பின்பற்றி ஓமானில் வேலை தேடி வரும் நிலையில், சில இலங்கையர்கள் மோசடியாளர்களிடம் சிக்கி சுற்றுலா விசா மூலம் ஓமானுக்குள் நுழைந்து பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட தீர்மானத்தின்படி, சுற்றுலா விசாவில் ஓமானுக்கு சென்று வேலை வாய்ப்பினை பெற்ற பின்னர் அதை பணி விசாவாக மாற்ற வாய்ப்பில்லை. எனவே வெளிநாட்டு வேலை வாய்ப்பை தேடுபவர்கள் சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று பணியகம் அறிவுறுத்தியுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஸ்பெயின் இளவரசி பலி

புதிதாக பரவும் ‘Monkey Pox’

ரஷ்ய மற்றும் பிரேஸில் தனக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை