உலகம்

நியூசிலாந்து கிரிக்கெட்டின் தலைவராக பெண்ணொருவர் நியமனம்!

(UTV | கொழும்பு) –

 

நியூசிலாந்து அணி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் தீர்மானமிக்க போட்டியை இன்று எதிர்கொண்டுள்ள நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தனித்துவமான மாற்றம் ஒன்றின் மீது உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது. அந்நாட்டு கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு பெண் ஒருவரை நியமித்துள்ளமையே இந்த விசேட கவனத்திற்கு காரணமாகும்.

நியூசிலாந்து கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக Diana Puketapu-Lyndon நியமிக்கப்பட்டுள்ளார். 1894 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நியூசிலாந்து கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு பெண் ஒருவர் நியமிக்கப்பட்டது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
Martin Sneddenயினால் காலியான அந்த நாட்டின் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு Diana நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து 1926 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் சபையில் முழு உறுப்பினராக ஆனதுடன் 1930 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஈரான் சனநெரிசலில் 35 பேர் பலி

கத்தார் FIFA அரங்கில் சாகிர் நாயகவின் மார்க்கப்பிரச்சாரம் செய்ய ஆயத்தம்!

இடிபாடுகளுக்கு இடையே இதயத் துடிப்பை தேடும் மீட்புப் படையினர்