உள்நாடு

பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்த இலங்கை மின்சார சபை!

(UTV | கொழும்பு) –

சீரற்ற காலநிலையில் ஏற்படும் மின் தடைகள் தொடர்பான முறைப்பாடுகளை CEB Care மொபைல் அப்ளிகேஷன் அல்லது 1987 அழைப்பு நிலையத்தின் சுய சேவை மற்றும் IVR அமைப்பு போன்ற டிஜிட்டல் வழிமுறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக மின் தடைகள் தொடர்பில் அழைப்பு நிலையங்களுக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதன் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார். எனவே, டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்தி முறைப்பாடுகளை அனுப்புமாறு நுகர்வோரை இலங்கை மின்சார சபை கோரியுள்ளது. இலங்கை மின்சார சபை தற்போதுள்ள நிலைமைகளை கருத்திற்கொண்டு மின்தடைகளை விரைவில் மீளமைக்க 24 மணி நேரமும் செயற்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ட்ரோன் கெமரா இயக்குவோர் குறித்த தரவுகளை சேகரிக்க தீர்மானம்

20 ஆவது அரசியலமைப்புக்கு எதிராக மனுத்தாக்கல் [UPDATE]

நாடாளுமன்ற உறுப்பினராகும் சனத் நிஷாந்தவின் மனைவி!