(UTV | கொழும்பு) –
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் தபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் பூநகரி கிளிநொச்சி ஆகிய பிரதான தபாலகங்கள் மூடப்பட்டு எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் புராதன தபாலகங்களை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் ஊழிய தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கிளிநொச்சி பிரதான தபாலகம் பரந்தன் பிரதான தபாலகம் மற்றும் பூநகரி பிரதான தபாலகம் ஆகியன மூடப்பட்டு எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது இதனால் மாதாந்த உதவி கொடுப்பனவை பெற வருவோர் மற்றும் தபால் சேவைகளை பெற்றுக்கொள்ள வருவோர் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්