உலகம்

காசாவின் பாதுகாப்பிற்கு இஸ்ரேலிய படையினரே பொறுப்பு – பெஞ்சமின் நெட்டன்யாகு.

(UTV | கொழும்பு) –

ஹமாசுடனான யுத்தத்தின் பின்னர் காசாவின் பாதுகாப்பை இஸ்ரேல் பொறுப்பேற்கும் என பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார். காலவரையறையற்ற காலத்திற்கு காசாவின் பாதுகாப்பை இஸ்ரேல் பொறுப்பேற்க்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

காசாவிற்குள் மனிதாபிமான பொருட்கள் செல்வதற்காகவும் பணயக்கைதிகள் வெளியேற உதவுவதற்காகவும் மோதல்களின் போது தந்திரோபாய ரீதியில் சிறிய இடைநிறுத்தங்களை செய்ய தயார் எனவும் இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். ஏபிசி நியுசிற்கான பேட்டியின் போது மோதல் முடிவடைந்த பின்னர் காசாவை யார் நிர்வகிக்கவேண்டும் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள பெஞ்சமின் நெட்டன்யாகு காசாவின் பாதுகாப்பை காலவரையற்ற காலத்திற்கு இஸ்ரேல் இராணுவம் பொறுப்பேற்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் பாதுகாப்பை பொறுப்பேற்காவிட்டால் என்ன நடந்தது என்பதை பார்த்திருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுவான யுத்தநிறுத்தம் தனது நாட்டின் நடவடிக்கைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ள அவர் இஸ்ரேலின் நெருங்கிய நண்பனான அமெரிக்கா போன்ற நாடுகள் வேண்டுகோள் விடுக்கின்றது போல மனிதாபிமான காரணங்களிற்காக சண்டையை இடைநிறுத்த தயார் சூழ்நிலைகளின் அடிப்படையில் அது பரிசீலிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரஷ்ய இராணுவ முகாமில் உள்ள ஆயுதக் கிடங்கில் வெடிப்பு

ஹிஜாப்புக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 92 பேர் பலி

800 கோடியைக் கடந்த உலக மக்கள்தொகை!