(UTV | கொழும்பு) –
கண் பார்வை குறைவு ஏற்படுவதை தடுப்பதற்கு மக்கள் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என கண் சிகிச்சை வைத்திய நிபுணர் மு.மலரவன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கண்ணில் பார்வை குறைவு ஏற்படுவதற்கு முக்கியமாக ஐந்து நோய்கள் தான் இருக்கின்றது, ஒன்று வென்புறை, இரண்டாவது கண்ணாடி அணிதல், ங்ளுக்கோமா, நீரிழிவு நோய், வயது காரணமாக வருகின்ற விழித்திரு நோய் இந்த ஐந்து நோய்களும்தான் இலங்கையை பொறுத்தவரையில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. இந்த தாக்கங்களிலிருந்து விடுபட வேண்டும் என்றால் வாழ்க்கை நடைமுறைகளில் எங்களால் இயலுமானவற்றை நாங்கள் பின்பற்றுதல் வேண்டும். முக்கியமாக எங்களுடைய உணவு பழக்க வழக்கங்களில் நாங்கள் கூடுதலான பழ, மரக்கறி வகைகள் நாங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அத்தோடு நாளாந்தம் சன் லைட்டிங் அளவு கண்ணில் படுவதை குறைத்துக் கொள்ள வேண்டும், மூன்றாவது மாணவர்கள் மற்றும் அனைவரும் தங்களுடைய டிவைஸ் நேரத்தை குறைக்க வேண்டும். இந்த மூன்று நடைமுறைகளையும் நீங்கள் பின்பற்றினால் இனி வரும் காலங்களில் பிரச்சனைகளை குறைத்துக் கொள்ள கூடியதாக இருக்கும்.
நான்காவது மிக முக்கியமானது தற்போது நடைமுறையில் இல்லை என நினைக்கிறேன் ரத்த உறவு திருமணத்தை இயலுமாணவரை குறைத்துக் கொள்ள வேண்டும்.
தற்போதைய நிலையில் வானிலை மாற்றங்களும் இந்த கண் நோய்களை கூட்டிக்கொண்டே போகும் என கூறுகின்றார்கள் இதனால் காலநிலை மாற்றங்களுக்கும் நாங்கள் உதவி செய்ய வேண்டி இருக்கின்றது. இந்த ஐந்து விடயங்களும் மிக முக்கியமான விடயங்கள் இது அனைத்தும் செய்யக்கூடிய விடயங்களாக இருக்கின்றது. இதன் மூலம் பொதுவாக ஏற்படுகின்ற கண் நோயின் தாக்கத்தினை குறைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්