(UTV | கொழும்பு) –
பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அதிமேதகு உமர் பாறூக் புர்கி மற்றும் அவரது ஆலோசகரான பைசல் அலிகான் ஆகியோர் கல்முனை மாநகர முன்னாள் பிரதிமுதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபருமான ரஹ்மத் மன்சூர் அர்களின் அழைப்பின் பேரில் இரண்டாவது தடவையாக நேற்று கல்முனைக்கு விஜயம் மேற்கொண்டு தேவையுடைய சில பயனாளர்களுக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரங்கள் வழங்கி வைத்தார். குறித்த இந்நிகழ்வானது கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வாழ்வாதாரங்களுக்கான ஒரு பகுதியாகவே இன்று மேற்குறிப்பிட்ட இயந்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களையும், அவர்களின் இடங்களையும் பார்வையிட்டு அவர்களது தேவைப்பாடுகளையும் உயர்ஸ்தானிகர் கேட்டறிந்து கொண்டதுடன், உயர்ஸ்தானிகர் உரையாற்றுகையில்; அம்பாறை மாவட்டத்துக்கு இன்று விஜயம் மேற்கொள்வது இரண்டாவது தடவையாகும் என்றும் தான் முதன்முதலாக அம்பாறை மாவட்ட விஜயம் மூன்று மாதங்களுக்கு முன்னர் ரஹ்மத் மன்சூர் அவர்களின் அழைப்பின் பேரிலே மேற்கொண்டு பார்வையிட்டு மிகவும் சந்தோஷமும் திருப்தியும் அடைந்ததாகவும், அதன் பிரகாரமே இன்று இரண்டாவது விஜயம் மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டு எதிர்காலங்களில் பாகிஸ்தான் அரசாங்கத்தின் மூலம் கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் அடையாளப்படுத்துகின்ற பயனாளர்களுக்கு தேவையான அனைத்துவித உதவிகளையும் அமைப்பின் ஸ்தாபகரும், முன்னாள் பிரதிமுதல்வருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் வழிகாட்டலில் செய்யவிருப்பதாகவும் இதன்போது நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் 2.5 மில்லியன் பெறுதியான நீர்வசதிகள் அம்பாறை மாவட்டத்தின் பல பாகங்களுக்கும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் மூலம் உயர்ஸதானிகரினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும் இந்நிகழ்வில் பவுண்டேஷன் உறுப்பினர்கள், குறித்த பயனாளர்கள், நலன்விரும்பிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්