(UTV | கொழும்பு) –
நாட்டில் கால்நடைகளை திருடுபவர்களுக்கு 1 இலட்சம் ரூபாய் அபராதம் மற்றும் ஒரு வருட கால சிறைத்தண்டனை வழங்க தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் கோரிக்கைக்கு அமைய விலங்குகள் நல சங்க பிரதிநிதிகள் குழுவுடன் விலங்குகள் நலச் சட்ட திருத்தங்கள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று அமைச்சகத்தில் நடைபெற்றது.
இது தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கருத்து தெரிவிக்கையில்,
இத் தீர்மானத்தை முன்னிட்டு விலங்குகள் நலச்சட்டத்தில் திருத்தத்தை கொண்டுவருமாறு கால்நடை அபிவிருத்தி பிரிவு அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். இலங்கையில் மாடுகள் திருட்டு அதிகரித்து வருகின்ற நிலையில், தற்போது நடைமுறையில் உள்ள விலங்குகள் நலச்சட்டத்தின் கீழ் பசுக்கள் திருடிய குற்றத்திற்கான அதிகபட்ச அபராதம் 50 ஆயிரம் ரூபாய் ஆகும் ஆனால் சட்டத்தில் சிறைத்தண்டனை குறித்து குறிப்பிடப்படவில்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கறவை மாடு மற்றும் பசு மாடு திருடுபவர்களுக்கான தண்டனைகள் தொடர்பான சட்டங்களில் புதிய திருத்தங்கள் உள்ளடக்கப்பட வேண்டும்.
அநுராதபுரம் மாவட்டத்தில் நாளொன்றுக்கு குறைந்தது 26 லீட்டர் பால் கொடுத்த பசுவும் கடந்த வாரம் திருடப்பட்டு கொல்லப்பட்டுள்ளது.
இத்தகைய திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடம் பல முறை முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் அதிகளவிலான மாடுகள் திருடப்பட்ட மாவட்டமாக கம்பஹா மாவட்டம் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්