(UTV | கொழும்பு) –
கிழக்கு மாகாணத்தில் ஞாயிறு மற்றும் போயா விடுமுறை நாட்களில் மேலதிக வகுப்புகளை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதனால், ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2.00 மணி வரையிலும், போயா தினங்களில் முழுநேர மேலதிக வகுப்புகள் நடத்தவும் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகளுக்கு அறநெறி கல்வியை பெற்றுக்கொடுக்க நேரமில்லாத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி செயலாளர் சட்டத்தரணி எச்.இ.எம்.டபிள்யூ.ஜி.திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, திருகோணமலை வடக்கு, கந்தளே, அம்பாறை, மஹாஓயா மற்றும் தெஹியத்தகண்டி ஆகிய பிராந்திய கல்விப் பணிப்பாளர்களுக்கு இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්