உள்நாடு

சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ள செந்தில் தொண்டமானின் உரை!

(UTV | கொழும்பு) –

பீஜிங்கில் நடைபெற்ற Belt and Road மன்றத்தின் 10வது ஆண்டு விழாவில் 130 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் கிழக்கு மாகாண ஆளுனரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் உரையாற்றினார்.

ஆளுநர் செந்தில் தொண்டமான் உரையாற்றுகையில், இவ்வுலகாமானது அனைவரும் வாழ சிறந்த இடமாகும்.மனிதர்களுக்கு இடையில் புரிந்துணர்வு இல்லாமையால் இன்று மனிதர்கள் வாழ முடியாத இடமாக இவ்வுலகம் மாறிக்கொண்டிருக்கின்றது. நண்பர்களாக இருக்க வேண்டிய நாடுகள் இன்று பகைவர்களாக மாறியுள்ளனர். இம்மாநாட்டில் இருக்கும் 130 நாடுகளும் ஒன்றிணைந்து ஆயுத கலாசாரம் முதலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்தார். செந்தில் தொண்டமான் கருத்து தெரிவிக்கும் வரை இவ்வாயுத மோதல் குறித்து மௌனம் காத்த நாடுகள் அவரின் உரைக்கு பிறகு அவருடைய கருத்தை மேற்கோள்காட்டி பல தலைவர்கள் உரையாற்றினர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில செனட் தலைவர் திரு.ராபர்ட் மைல்ஸ் ஹெர்ட்ஸ்பெர்க் செந்தில் தொண்டமானின் பொதுநலமிக்க விவேகமான உரைக்கு நேரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எக்காரணம் கொண்டும் OTP ஐ யாரிடமும் பகிர வேண்டாம்

editor

அநுர இன்று முழு நாட்டிலும் வன்முறையை ஏற்படுத்தியுள்ளார் – அவர்களால் ஒரு பல்கலைக்கழகமும் இன்று மூடப்பட்டுள்ளது – சஜித்

editor

‘கடினமான காலங்களில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்’