(UTV | கொழும்பு) –
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சேதம் நீர்கொழும்பு இருந்து பாணந்துறை வரையிலான கடல் பரப்பு மட்டுமே என்று முடிவெடுத்துள்ளனர் என்றும்,என்றாலும் கடல் ஆமைகளின் உடல்கள் கிழக்கு கடற்கரை வரை குவிந்துள்ளன என்றும்,பல்லுயிர் வகைமை மற்றும் மீனவ சமூகத்தின் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் அபரிமிதமானது என்றும்,நட்டஈடு பெறும் மீனவர்களின் எண்ணிக்கையும் இதனால் சிக்கலாக அமைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
துல்லியமான தரவு கணக்கீடு மேற்கொள்ளப்படாததால்,பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரை மட்டுமே சேதமடைந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும்,இந்த வரம்பை மீறி பாதிப்பு ஏற்பட்டதா இல்லையா என்பதைக் கணக்கிடுவதற்கான தொடர்புடைய தரவு மீன்பிடி அமைச்சிடம் இருந்து கிடைக்கவில்லை என்றும்,ஒப்பிட்டுப் பார்க்க முடியாத வகையில் தரவுகள் கிடைக்காததால், தற்போதேனும் சரியான தரவுகளை கணக்கிட்டு நிபுணர் குழுக்களுக்கு வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பாணந்துறை,நீர்கொழும்பு எல்லைக்கு அப்பால் உள்ள மீனவ சங்கங்கள், அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களின் மீன் பிடி தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் கருத்துத் தெரிவிப்பதற்கான வாய்ப்பை வழங்குமாறும், நிபுணர் குழுவிடம் உள்ள தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து இழப்பீடு தொடர்பாக விரிவான அறிக்கையை தயாரிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஜித் மான்னப்பெரும தலைமையிலான வனவிலங்கு சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්