(UTV | கொழும்பு) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலங்கையில் உள்ள பாலஸ்தீன தூதரகத்தில், தூதுவர் கலாநிதி. ஸுஹைர் எம்.எச்.டார் செயிட் அவர்களை இன்றையதினம் (19) சந்தித்துக் கலந்துரையாடினார்.
எல்லை மீறிய இஸ்ரேலின் எதேச்சாதிகாரப் போக்குகளால், காஸாவில் ஏற்பட்டுள்ள அவலங்கள் குறித்து, தனது ஆழ்ந்த கவலையையும் இதன்போது அவர் தெரிவித்தார்.
மேலும், போர் விதிகளை மீறி இஸ்ரேல் கட்டவிழ்த்துள்ள வான் தாக்குதல்களை கண்டிப்பதுடன், முஸ்லிம் உலகம் ஒன்றுபட்டு ஸியோனிஸவாதிகளை எதிர்க்க ஆயத்தமாக வேண்டும் என்றும் பலஸ்தீனத் தூதுவரிடம் அவர் குறிப்பிட்டதுடன், உயிரிழந்வர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் குற்றுயிராகக் கதறும் சகோதரர்களுக்காகப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.பௌசி மற்றும் ஹலீம் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්