(UTV | கொழும்பு) –
நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் எதிர்பார்த்தளவு மழை வீழ்ச்சி கிடைக்காமை மற்றும் நுகர்வில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என்பவற்றின் காரணமாக மின்சார சபையின் வருமானத்தை விட செலவு அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்குள் 18 சதவீத மின் கட்டணத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியமென மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர த சில்வா தெரிவித்தார். உத்தேச மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் நிலைப்பாடுகளை பெறும்வேலைத்திட்டம் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜூன் மாதம் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், எதிர்பார்த்தளவு மழைவீழ்ச்சி கிடைக்காமையின் காரணமாகவே செப்டெம்பர் மாதம் மீண்டும் மின் கட்டணத்தை திருத்துவதற்கான கோரிக்கையை முன்வைக்க நேர்ந்தது. 4500 ஜிகாவோட் நீர் மட்டம் கிடைக்குமென நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால், தற்போது நிலவும் காலநிலைக்கமைய எங்களின் மதிப்பீட்டுத் தொகை 3750 ஜிகாவோட்டாக குறைவடைந்துள்ளது. அதனூடாக, ஜுன் மாதத்தில் அதேபோன்று 14.5 சதவீத கட்டண குறைப்பும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த இருவிடயங்களினாலும் 32 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
மழைகாலம் என்பதால் வாயுசீராக்கி (ஏசி), மின்விசிரி போன்றவற்றின் பாவனை குறைவடையும்.இதனால் எதிர்பார்த்த மின் நுகர்வு வீழ்ச்சியை சந்திக்கும். அவ்வாறு குறைவடையும் ஒவ்வொரு கிலோவோட்டுக்கும் அலகுக்கு அலகு நாங்கள் செலவு செய்யும் நிதியை விட குறைந்தளவே வருமானமாக கிடைக்கும். அந்த மாற்றத்தின் காரணமாக மக்களிடம் செல்லும்போது மக்களிடமும் அதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். 32 அதிகரிப்பு என்பது தவறாகும். ஆனால், தற்போது 18 சதவீதத்தால் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්