உள்நாடு

மாதாந்த சம்பளத்தை அதிகரிக்க கோரி அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

(UTV | கொழும்பு) –

2024 வரவு – செலவுத் திட்டத்தில் அனைத்து ஊழியர்களின் சம்பளத்தை 20,000 ரூபாவினால் அதிகரிக்க கோரி முந்தல் பிரதேச செயலக ஊழியர்கள் இன்று நண்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தல் பிரதேச செயலகத்திற்கு முன்பாக நண்பகல் 12 மணி முதல் பகல் 1 மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, “அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை 20 ஆயிரத்தால் அதிகரியுங்கள்”, ” எரிபொருள், சமையல் எரிவாயு, எரிபொருள் உள்ளிட்ட பொருட்களின் விலைகளை குறையுங்கள்” , “பொருட்களுக்கு விலைகளை அதிகரிக்கும் போது இரச ஊழியர்களை கவனத்தில் கொள்ளுங்கள்” என்று இதுபோன்ற பல்வேறு சுலோகங்களை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியும் அரச உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலைக்கு ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் m.p விஜயம்

எட்டாவது பாராளுமன்றத்தின் 4வது கூட்டத் தொடர் நாளை

ரூ.5,000 கொடுப்பனவு தொடர்பில் பிரதமர் அலுவலகம் விஷேட அறிவிப்பு