உள்நாடு

வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் – மஹிந்தானந்த

(UTV | கொழும்பு) –

எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான புரிந்துணர்வு உடன்படிக்கை அடுத்த மாதத்தில் கைச்சாத்திடப்படும் என நம்புவதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், அபிவிருத்தி வேலைத்திட்டத்தை மீள ஆரம்பிப்பதன் மூலம் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.

நாடு கடந்த ஆண்டை விட தற்போது முன்னேறிய இடத்தில் இருப்பதாகவும், தற்போது மின்சாரம் துண்டிக்கப்படுவதில்லை  என்றும் அவர் கூறியுள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்றும் நாளையும் இரவு நேர மின்வெட்டு அமுலாகாது

கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர்கள் கலந்துகொள்ளும் எந்த நிகழ்வுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி பொறுப்பல்ல..

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு