உலகம்

கிரீன் கார்ட் விண்ணப்பதாரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

(UTV | கொழும்பு) –

அமெரிக்காவில் கிரீன் கார்ட் விண்ணப்பதாரர்களுக்கு வேலைவாய்ப்பு கால அவகாசம் 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமையான கிரீன் கார்ட் பெற பல நாடுகளை சேர்ந்த இலட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துக் காத்திருக்கின்றனர்.இதில் கிரீன் கார்ட் விண்ணப்பதாரர்களுக்கு முன்னதாக, வேலைவாய்ப்பு அங்கீகாரம் வழங்கப்படும். அதிகபட்ச காலமான இரண்டு ஆண்டுகளுக்கு மாத்திரமே விண்ணப்பிக்கலாம். இரண்டு ஆண்டு காலம் முடிந்தபின்னர் மீண்டும் நீடிக்க கோரி விண்ணப்பிக்க வேண்டும். இந்நிலையில், இந்த வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களுக்கான(Employment Authorization Documents) செல்லுபடி காலத்தை தற்போது 5 ஆண்டுகளாக அதிகரித்துள்ளதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 27 முதல் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களுக்கு விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு இது பொருந்தும். இதனால் 2 ஆண்டுகளில் இதனை நீட்டிக்க வேண்டிய தேவையிருக்காது என தெரிவித்துள்ளது.
கிரீன் கார்ட் விண்ணப்பங்கள் இலட்சக்கணக்கில் நிலுவையில் உள்ள நிலையில், விண்ணப்பதாரர்களுக்கு இந்த கால நீட்டிப்பு உதவியாகவே அமைகின்றது. இது அவர்களுக்கு அமெரிக்காவில் தொடர்ந்து பணி புரியும் வாய்ப்பினை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிரீன் கார்ட் விண்ணப்பங்களில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வையும் பெற்று கொள்ளலாம். மேலும் எதிர்காலத்தில் கிரீன் கார்ட் விண்ணப்பிக்க தகுதியாகும் ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களும் இது மகிழ்ச்சியான தகவலாகவே அமைகின்றது.

 

எனவே ஹெச்-1பி, ஹெச்-1சி, ஹெச்-2ஏ, ஹெச் -2பி, ஹெச்-3 விசா வைத்திருப்பவர்களின் கணவன் மற்றும் மனைவிக்கும் விருப்ப நடைமுறை பயிற்சி (OPT) திட்டத்தின் கீழ் உள்ள சர்வதேச மாணவர்களுக்கும் இந்த நீட்டிப்பு காலம் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனாவின் வீரியம் – ஸ்பெயின் மீண்டும் முடக்கம்

மாஸ்க் அணிவதும் அணியாததும் தனிநபர் விருப்பம்

கொவிட் 19 தொடர்பிலான வதந்திகளை பதிவிட தடை