உள்நாடு

டக்ளஸ் தேவானந்தா இராஜினாமா செய்வதே சிறந்தது – சாணக்கியன்.

(UTV | கொழும்பு) –

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏதாவது ஒரு நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை இராஜினாமா செய்து விட்டு வெறுமனே ஒரு பாராளுமன்ற உறுப்பினாக இருப்பதே சிறந்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். இன்று  மட்டு. ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்திய இழுவைப் படகு விடயம் குறித்து பிரதமர் மற்றும் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் எதிர்மறையான கருத்துகள் தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதமர் இந்திய இழுவை படகுகளுக்கு Pass அடிப்படையில் அனுமதி வழங்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். அதே நேரம் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஒரு துளியேனும் இந்திய மீனவர்களுக்கு அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனாலும் அத்துமீறிய மீன்பிடி இடம்பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது. இதனை எவ்வறு பார்க்கின்றீர்கள்? டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் இழுவைப்படகு இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது அவருக்கு மாதமொன்றுக்கு 20,000 ரூபாய் இலஞ்சம் கொடுப்பதாகவும் பாராளுமன்றத்திலே ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். இவ்வாறு அவர் தொடர்பான விடயங்கள் இருக்கின்றன.

அந்த விடயங்களெல்லாம் ஒருபுறம் இருக்க டக்ளஸ் தேவானந்தா அவர்களை மீன்பிடி அமைச்சராக நியமித்ததற்கான காரணமே வடக்கு கிழக்கிலே இருக்கும் தமிழர்களுக்கும் தென்இந்தியாவில் இருக்கும் தமிழர்களுக்கும் முரண்பாடு வரவேண்டும்.அதன் காரணமாக தென்இந்திய முதலமைச்சருக்கோ, அரசியல்வாதிகளுக்கோ இலங்கையில் வடக்கு கிழக்கிலே வாழும் தமிழ் மக்கள் மீதான எதிரான சிந்தனை வரவேண்டும் என்பதற்காகவே திட்டமிட்ட வகையிலே டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டிருக்கின்றார் என்பது நான் அடிக்கடி சொல்லும் விடயம். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உண்மையிலேயே வாயால் சொல்வது ஒன்று நடைமுறைப்படுத்துவது ஒன்று.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

”சம்பள உயர்வு : தோட்டத் தொழிலாளர்களாலும் பொதுமக்களாலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது!”

ஊரடங்கு தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம்

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்.