உள்நாடு

இஸ்ரேலுக்கு இலங்கை தூதரகம் விடுத்த விசேட அறிவிப்பு!

(UTV | கொழும்பு) –

இஸ்ரேலின் வடக்கில் லெபனான் மற்றும் சிரியாவிற்கும் அருகில் உள்ள நகரங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் அபாயம் உள்ளதால், அந்த பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்கள் உரிய முறையில் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
லெபனான் மற்றும் சிரியாவுக்கு அருகாமையில் உள்ள நஹாரியா, அகோ, ஹைஃபா, திபெரியா, நசரித் ஆகிய கிராமங்களுக்கு அருகில் தாக்குதல்கள் நடத்தப்படும் அபாயம் உள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, குறித்த பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றி மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், இஸ்ரேல் அரசாங்கம் பாதுகாப்புப் படையினரை அந்தப் பகுதிக்கு அனுப்பி, பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், காசா பகுதியின் வடக்குப் பகுதிகளில் வசிக்கும் மக்களை தெற்குப் பகுதிகளுக்கு வெளியேற்ற இஸ்ரேல் அரசு 24 மணிநேர அவகாசம் அளித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

டெங்கு தொற்றுநோய் நிலைமை பற்றிய எச்சரிக்கை

அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்க அனுமதி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு