(UTV | கொழும்பு) –
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை சீனா செல்லவுள்ளார்.
நாட்டின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்றும் இதன்போது இடம்பெறவுள்ளது. இதேவேளை, அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டம் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.
ஜனாதிபதி நாளை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டை விட்டு செல்லவுள்ள நிலையில் இந்த அமைச்சரவை கூட்டம் நேற்று பிற்பகல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு அரசாங்கத்தின் எதிர்கால பணிகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், பல அமைச்சரவை பத்திரங்களுக்கு அனுமதியும் பெறப்பட்டது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්