உள்நாடு

காட்டு யானை ஊருக்குள் புகுந்து பலத்த சேதம்!

(UTV | கொழும்பு) –

திருகோணமலை பாலம்போட்டாறு கிராமத்தின் பத்தினிபுரம் பகுதியில் தொடர் காட்டு யானைகளினால் பலத்த சேதங்கள் ஏற்படுவதாக அப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நேற்று இரவு ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளினால் பலன் தரும் தென்னை,வாழை,கத்தரி,வெண்டி உள்ளிட்ட மரங்களை துவம்சம் செய்து விட்டு சென்றுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியை அண்மித்த இடத்தில் பாதுகாப்பான யானை வேலி இன்மை காரணமாக ஊருக்குள் யானை படை எடுத்து வருவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். மாலை நேரங்களில் தங்களது பிள்ளைகளை மேலதிக வகுப்புக்கு அழைத்து சென்று பயத்துடனே வீடுகளுக்கு செல்ல நேரிடுகிறது.நிம்மதியாக தூங்க முடியாது மாலை வேலையிலேயே யானை ஊருக்குள் வந்து விடுகிறது இதனால் அச்ச சூழ் நிலையில் தாங்கள் காலத்தை கழிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். தோட்டச் செய்கையை வாழ்வாதாரமாக நம்பியே இருக்கும் போது அதனையும் யானை அழித்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். பல தடவை உரிய அதிகாரிகளிடத்தில் கோரிக்கை விடுத்தும் எவ்வித தீர்வும் கிட்டவில்லை என அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இனிமேலாவது யானையின் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட தரப்புக்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு வெளியிடுவதில் தாமதம்

கொழும்பு அண்மித்த பகுதிகளில் தூசி துகள்களின் செறிவு அதிகரிப்பு

MMDA : முஸ்லிம் எம்பிகளின் அறிக்கை நீதியமைச்சரிடம் கையளிப்பு:  கையொப்பம் இட மறுத்த ரவூப் ஹக்கீம்