(UTV | கொழும்பு) –
தீவிரவாத தாக்குதல்களை கொண்டாடக்கூடாது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடாவில் தீவிரவாத தாக்குதல்கள் கொண்டாடப்படுவதனை ஏற்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வன்முறைகள் போற்றப்படுவதனை அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு பேரணிகள் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். வன்முறைகளை போற்றும் வகையில் எந்த ஒரு குழுவும் எந்த ஒரு சூழ்நிலையிலும் செயல்படக்கூடாது என அவர் twitter பதிவு ஒன்றின் மூலமும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்ரேலிய பொதுமக்கள் மீதான தாக்குதல்களை ஆதரிக்கும் அல்லது போற்றும் வகையில் பலஸ்தீன தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களை பிரதமர் ட்ரூடோ கண்டித்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் இணைந்து செயல்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இவ்வாறான பேரணிகளை ஏற்றுக் கொள்ள முடியாதென கனடாவின் பல்வேறு அரசியல் தலைவர்களும் சுட்டிக்காட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්