உலகம்உள்நாடு

இஸ்ரேல்-பலஸ்தீன் போரால் காசாவில் வைத்தியசாலைகள் நிரம்பி வழிகிறது!

(UTV | கொழும்பு) –

இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக படுகாயமடைந்தவர்கள் குவிவதால் காசாவில் வைத்தியசாலைகள் நிரம்பி வழிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சனிக்கிழமை (07.10.2023) பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தியதில் 1000இற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியானார்கள்.

இதை தொடர்ந்து இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர் தொடர்ந்திருக்கிறது. தற்போது 5வது நாளாக நடைபெற்று வரும் இஸ்ரேல் – ஹமாஸ் போரில் அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன.

ஹமாஸ் அமைப்பை கட்டார், ஈரான் உட்பட பல மத்திய கிழக்கு நாடுகள் ஆதரிக்கின்றன. இவ்வாறான சூழலில் காசா பகுதியை தொடர்ந்து லெபனான் மீதும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானிலிருந்து பீரங்கி மூலம் குண்டுகள் வீசப்பட்ட நிலையில் இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவிலும் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

படுகாயமடைந்தவர்கள் குவிவதால் காசாவில் வைத்தியசாலைகள் நிரம்பியுள்ளதுடன் படுக்கைகள், மருந்துகள் இல்லாததால் 5000 இற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் தவித்து வருகின்றதாக செய்திகள் கூறுகின்றன. அத்துடன் 10 மணி நேரம் மட்டுமே மின் விநியோகம் நீடிக்கும் என்பதால் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், காசாவில் இலட்சக்கணக்கான மக்கள் ஏற்கனவே குடிநீர், உணவு இன்றி தவித்து வருகின்றதாகவும் தெரியவருகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தானிஷ் அலிக்கு சிறைத்தண்டனை [UPDATE]

கொரோனா தொடர்ந்தும் உருமாறும்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு [UPDATE]