(UTV | கொழும்பு) –
2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் 26 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஒக்டோபர் மாதத்தில் இதுவரை 26 ஆயிரத்து 272 வெளிநாட்டு பிரஜைகள் இலங்கை தீவுக்கு வருகை தந்துள்ளனர்.
அக்டோபர் மாதத்தில் 6 ஆயிரத்து 293 இந்திய நாட்டு பிரஜைகள் வருகை தந்திருப்பதாகவும் இதனால் இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யா நாட்டில் இருந்து 2 ஆயிரத்து 352 நபர்களும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 1 ஆயிரத்து 904 பேரும், சீனாவில் இருந்து 1 ஆயிரத்து 900 பேரும், ஜெர்மனியில் இருந்து 1 ஆயிரத்து 679 பேரும், ஆஸ்திரேலியாவில் இருந்து 1 ஆயிரத்து 307 சுற்றுலாப் பயணிகளும் அக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு வந்துள்ளனர்.
அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை 1 இலட்சத்து 042 ஆயிரத்து 528 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්