உள்நாடு

அரசாங்கத்திற்கு சார்பாக சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் – சுனில் ஹந்துநெத்தி.

(UTV | கொழும்பு) –

அரசாங்கத்திற்கு எதிராக அதிகரிக்கும் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே அரசாங்கம் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த முயல்கின்றது என ஜேவிபியின் செயற்குழு உறுப்பினர் சுனில்ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.தென்கொரியாவில் இலங்கையர்கள் குழுவொன்றுடனான சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தங்கள் நடவடிக்கைகளை எதிர்க்கின்றனர் என்பதை அரசாங்கம் நன்கு அறிந்துள்ளதால் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் பல சட்டங்களை அறிவித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் பொதுமக்களிற்கு தகவல்களை வழங்குகின்றன அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப செயற்படுகின்றது என்றால் மோசடியில் ஈடுபடவில்லை பொதுமக்களின் பணத்தை கொள்ளையடிக்கவில்லை என்றால் அரசாங்கம் அச்சமடையதேவையில்லை என சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி உட்பட அரசாங்கத்திற்கு மக்கள் தங்ளுடன் இல்லை மக்கள் தங்களை எதிர்க்கின்றார்கள் என்பது நன்கு தெரிந்துள்ளது தற்போதைய ஜனாதிபதி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் ஆகவே மக்கள்தன்கு எதிராக உள்ளனர் என்பது அவருக்கு தெரியும் எனவும் சுனில்ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.
அவர் மக்களின் ஆர்ப்பாட்டங்கள் குறித்து அச்சப்படுகின்றார் மக்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை சகித்துக்கொண்டால் அவர் அச்சமடையத்தேவையில்லை எனவும்அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் சமூக ஊடகங்கள் தற்போது குறிப்பிடத்தக்க விதத்தில் மாற்றமடைந்துள்ளன அரசாங்கம் கடந்த காலத்தில் இலத்திரனியல் ஊடகங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது என தெரிவித்துள்ள ஜேவிபி உறுப்பினர் ஊடகங்களை ஒடுக்க அரசாங்கம் முயற்சித்தால் அரசாங்கத்தை மக்கள் ஒடுக்கமுயலும் முதல்தடவையாக அது மாறும் எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவும் சமூக ஊடகங்களை கட்டு;ப்படுத்த முயன்றார் முகநூல் வட்ஸ்அப் போன்றவைகளை முடக்கினார் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை மக்கள் அதனை ஏற்றுக்கொண்டிருந்தால் அவர் இன்னமும் ஆட்சியில் இருந்திருப்பார் இதனை நினைத்துப்பார்த்தால் ரணில் விக்கிரமசிங்க அதனை செய்யமாட்டார் எனவும் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

குறுகிய காலத்தில் நிலக்கரி கொள்முதல் செய்ய ஸ்பாட் டெண்டர்

ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு வழங்க எதிர்ப்பு!

பிரதமரால் பொலிஸாருக்கு அறிவுறுத்தல்