உள்நாடு

தாய்வானில் முதன் முறையாக தயாரிக்கப்பட்ட நீர் மூழ்கி போர்க்கப்பல்!

(UTV | கொழும்பு) –

தாய்வானில் முதன் முறையாக நர்வால் என்ற நீர்மூழ்கி போர்க்கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு அங்குள்ள காஹ்சியுங் நகரில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் ஜனாதிபதி சாய்-இங்-வென் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில், தாய்வான் வரலாற்றில் இது முக்கியமான நாள் ஆகும் என தெரிவித்தார்.

இந்த நீர்மூழ்கி கப்பலானது 229.6 அடி நீளம், 26.2 அடி அகலம் மற்றும் 59 அடி உயரம் கொண்டது. இதில் 3 ஆயிரம் டொன் எடை வரையிலான பொருட்களை சுமந்து செல்லலாம். ஒருசில சோதனைகளுக்கு பின்னர் இந்த கப்பல் அடுத்த ஆண்டு நாட்டின் கடற்படையில் சேர்க்கப்படும் என தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அனைத்து வணிகப் பொருட்களுக்கும் புதிய சட்டம்

IMF உடனான மூன்றாவது மீளாய்வுக் கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு

editor

கொரோனா அச்சுறுத்தல் : சில இடங்களில் ஊரடங்கு தளர்வு