உள்நாடு

கணக்காய்வு அறிக்கையை உடன் பகிரங்கப்படுத்துங்கள் – தொழிற்சங்க உறுப்பினர்கள் கோரிக்கை.

(UTV | கொழும்பு) –

இலங்கை ரயில் ஊழியர் நலன்புரி சங்கத்தின் நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் ரயில்வே திணைக்களத்தின் உள்ளக கணக்காய்வு பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு அறிக்கையை உடனடியாக பகிரங்கப்படுத்த வேண்டுமென தொழிற்சங்க உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சங்கத்தின் நான்கு பிரதான உத்தியோகத்தர்களினால் சட்டவிரோதமாகப் பெற்றதாகக் கூறப்படும் கொடுப்பனவுகள், கதிர்காமம் முதியோர் மண்டபம் மற்றும் இரத்மலானை தலைமை அலுவலகத்தின் புதிய நிர்மாணப் பணிகள் மற்றும் திருத்தங்களுக்கு செலவிடப்பட்ட பணம் தொடர்பாக உறுப்பினர்கள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், உரிய உள்ளக கணக்காய்வு ரயில்வே பொது மேலாளர் உத்தரவின் பேரில் நடத்தப்பட்டது.

சம்பந்தப்பட்ட நான்கு அதிகாரிகள் அடிப்படைச் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை சட்ட விரோதமாகப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும், போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை ரயில்வே ஊழியர் நல சங்கத்தின் அதிகாரிகள் அத்தகைய கொடுப்பனவைப் பெற முடியாது எனவும் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். விசாரணையில் பங்குபற்றுவதற்காக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சங்கத்திடம் பணம் பெற்றுள்ளதாகவும் கடந்த ஜனவரி மாதம் முதல் கதிர்காமம் முதியோர் மண்டபத்தின் வருமானம் வங்கியில் செலுத்தப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளதாக உறுப்பினர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாட்டின் சனத்தொகையில் 20வீத மக்களுக்கு கொவிட் தடுப்பூசி – WHO

1,373 கிலோ மஞ்சளுடன் இருவர் கைது.

அனைத்து பாலர் பாடசாலைகளும் பூட்டு