(UTV | கொழும்பு) –
2023 க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கான இறுதி திகதி ஒக்டோபர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. திட்டமிடப்பட்ட 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கடந்த வாரம் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
பரீட்சைகளை நடத்துவதற்கான திருத்தப்பட்ட திகதிகள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் 2 ஆம் திகதி வரை நடைபெறவிருந்தன. எனினும், மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්